பல வாரங்களாக பெய்யாத மழை! மகாராஷ்டிரத்தில் வறட்சி பாதிப்பு அபாயம்!

Wait 5 sec.

மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளில் வறட்சி பாதிப்பு அபாயம் உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிரத்தில் பல நகரங்களில் தொடர்ச்சியாக 40 நாள்கள் வரை மழை பெய்யாததால் வறட்சி சூழ்நிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள 11 மாவட்டங்களில் கடந்த 30 நாள்களாகவும், 4 மாவட்டங்களில் 34 நாள்களாகவும், 4 மாவட்டங்களில் 37 நாள்களாகவும், 2 மாவட்டங்களில் 40 நாள்களாகவும் மழை பெய்யவில்லை எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழைக்குப் பின் அங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் மழை எங்கும் பெய்யவில்லை. இதனால், அறுவடைக்குத் தயாராக உள்ள காரீஃப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.இதனால் புனே, அகில்யா நகர், புல்டானா, நாசிக், சாங்லி, சதாரா போன்ற மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதேபோல பீட், சத்ரபதி சம்பாஜி நகர், தாராசிவ் மற்றும் சோலாப்பூர் போன்ற பகுதிகளும் வறட்சியால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மழை பெய்யாததால் பருத்தி, சோயாபீன், சோளம் மற்றும் பருப்பு வகைகள் வறண்டு வரும் நிலையில், அரசு வறட்சி அறிவிப்பு செய்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.எல் நினோ காரணமாக பருவமழை பாதிக்கப்பட்டதே வறட்சிக்கு காரணம் என விவசாயிகள் சங்கத் தலைவர் விஜய் ஜவாந்தியா தெரிவித்துள்ளார். வளர்ச்சி நிலையின் முக்கிய கட்டத்தில் இருக்கும் பயிர்களால் இதுபோன்ற வறட்சியைத் தாங்க முடியாது எனக் கூறிய அவர், மானாவாரிப் பயிர்கள் முழுவதும் சேதமடைந்து முதலீட்டைக் கூட பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விதைகள் மற்றும் உரங்களை வாங்கிய விவசாயிகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மழைக்காகக் காத்திருப்பதை விடுத்து, மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு உதவும் விதமாக அவசரகால திட்டங்களைத் தொடங்கி இழப்பைக் குறைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.Reports indicate a risk of drought affecting several parts of Maharashtra.அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தைத் தொடங்கி வைக்கும் முதல்வர் விஜய்!