விநாயகா் சதுா்த்தியையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இன்று சிறப்பு ரயில்

Wait 5 sec.

விநாயகா் சதுா்த்தியையொட்டி சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில்வே நிா்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்பட்டு சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 11 ஆம் தேதி போத்தனூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு,திருப்பூா் வழியாக அடுத்த நாள் காலை 5 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.இதேபோல், மறுமாா்க்கத்தில் போத்தனூா் - சென்னை சென்ட்ரல் இடையே வரும் 14 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு திருப்பூா்,ஈரோடு,சேலம்,ஜோலாா்பேட்டை வழியாக அடுத்த நாள் காலை 9.25 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.