மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ஸம்ஹிதா ஹோமம் என 3 நாள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்களுடன் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 33 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 3 நாள் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. யாகசாலையில் சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ஸம்ஹிதா ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை மேற்கொண்டனர்.கும்பாபிஷேகத்திற்காகக் கோயிலில் உள்ள 514 சுவாமிகளுக்குத் தேவையான சிறிய மற்றும் பெரிய பித்தளை கலசங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கலசங்களுக்கு நூல் சுற்றும் பணியிலும் சிவாச்சாரியார்கள் ஈடுபட்டுள்ளனர்.மேலும், கும்பாபிஷேக யாகசாலைக்குத் தேவையான ஹோமப் பொருள்கள் கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டு வருகின்றன. காசியிலிருந்து கங்கை புனித நீர் 1,008 லிட்டரும், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டுள்ளது.இதுதவிர 9 வகையான தானியங்கள், மூலிகைப் பொடிகள், ஆலங்குச்சி, அரசங்குச்சி, பசுநெய் உள்ளிட்ட 96 வகையான ஹோமப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகிறது.In preparation for the consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple, three days of Yagasalai rituals—comprising Shanti Homam, Moorthy Homam, and Samhita Homam —were conducted.திருத்தணி முருகன் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி!