அன்பான ரசிகர்களே ரெடியா?சூர்யா - 47 அப்டேட்!

Wait 5 sec.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அவரது 47-வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சூர்யாவே தன் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். மேலும், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் சூர்யாவின் தோற்ற போஸ்டர் நாளை (செப். 9) மாலை 6 மணிக்கு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது வெறும் போஸ்டரா இல்லை கிளிம்ஸ் விடியோவா என்பதும் நாளையே தெரியவரும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். கார்த்தி, சூரி... யாருக்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன? An update regarding actor Suriya's 47th film has been released.