பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அரசியல் சட்டப்பேரவையை மையப்படுத்தியதைப்போன்று ஜனநாயக அறை புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆளும் அணியினர், எதிர் அணியினர் என போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.ஆளும் அணியின் தலைவராக நடிகை ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் அணியின் குறைகளை எதிர் அணியினர் ஜனநாயக அறையில் சுட்டிக்காட்டலாம். பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப். 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிரபலங்கள் மட்டுமே போட்டியாளர்களாக பங்கேற்றுவந்த நிலையில், இந்த சீசனில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் (ஷாமா, ஜேசன், முனியம்மா) போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கிடையே இந்த வார தலைவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகளைப் பெற்று வினோத் பாபு முதலிடத்தில் இருந்தார். ஷாதிகா இரண்டாவது இடம் பெற்றார். மூன்றாவது இடத்தை ஷாமா - ஜேசன் ஆகியோர் இடம்பெற்றனர். மூன்றாவது இடத்திற்காக நடந்த பேச்சுவார்த்தையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து ஜேசன் விலகினார். நடிகை ஷாதிகாஇதனைத் தொடர்ந்து வினோத் பாபு, ஷாகிதா, ஷாமா இடையே நடந்த போட்டியில் ஷாகிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராகத் தேர்வானார். தலைவராகத் தேர்வான ஷாதிகா, தனக்கான ஆளும் அணியைத் தேர்வு செய்தார். அதில் லஷ்மி பிரியா, குமரன், ராகவ், முனியம்மா, அடாவடி அன்சர், முகேஷ், பாண்டி, முத்தழகி, அவினாஷ் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர். எஞ்சிய போட்டியாளர்கள் எதிர் அணியினராக இனி செயல்பட வேண்டும். அவர்களுக்கு வினோத் பாபு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் அணியில் ஜேசன், ஷாமா, சாந்தினி ஆகியோர் உள்ளனர். ஜனநாயக அறையில் ஆளும் அணியினர், எதிர் அணியினர்...வீட்டின் நிர்வாகப் பொறுப்புகளை துறை வாரியாகப் பிரித்துக்கொண்டு ஆளும் அணியினர் மேற்கொள்வார்கள். அவற்றில் உள்ள குறைகளை எதிர் அணியினர் ஜனநாயக அறையில் சுட்டிக்காட்டலாம். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் பிரச்னைகள் சரி செய்யப்படும்.இம்முறை அரசியல் சட்டப்பேரவையை மையப்படுத்தி ஆளும் அணி, எதிர் அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.பிக் பாஸ் 10: மகாநதி சீரியலில் இருந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் அதிகம்!Bigg boss 10 tamil update Bigg Boss contestants split into two teams on the very first day