சட்டப்பேரவையில் பதிலுரையின் இடையேயான தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டது என முதல்வர் சி. ஜோசப் விஜய் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளதாவது:''சட்டப்பேரவையில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை அர்த்தம் கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார். சட்டமன்றத்தில் 7.9.2026 அன்று காவல்துறை மானிய கோரிக்கையில், என்னுடைய பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தனிப்பட்ட முறையில் யார் மனதையும் புண்படுத்துகிற செயலாக அதை…— TVK Vijay (@TVKVijayHQ) September 8, 2026சட்டப்பேரவை மாண்பு கேள்விக்குள்ளாகிவிட்டது! மு.க. ஸ்டாலின்The body language during the reply was spontaneous: Chief Minister joseph Vijay