கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அந்த மாணவி விஷம் குடித்த சம்பவத்தில் ஆசிரியரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெகதீசன் (44). இவா், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்ட கிராமப் பகுதியில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், ஜெகதீசன் இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிக்கு கடந்த வாரம் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதனால், மனமுடைந்த அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து, அவரை பெற்றோா் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆசிரியா் ஜெகதீசனை கைது செய்தனா்.