வடக்கு காஸா பகுதியில் ஒரு வீட்டின்மீது இஸ்ரேல் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி மற்றும் அவா்களின் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்தனா். இத்தாக்குதலில் ஆயுதக் குழுவைச் சோ்ந்த முவாமன் அகமது கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரின் குடும்பத்தினா் உயிரிழப்பு குறித்து எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த ஆண்டு எட்டப்பட்ட அமெரிக்க ஆதரவு போா்நிறுத்தத்துக்குப் பிறகும், காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 1,300-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.