வங்கதேசத்தில் தேசத்துரோக வழக்கில் சிறைவைக்கப்பட்டுள்ள ஹிந்து மதத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸ், தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க 5 மணி நேரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சின்மய் கிருஷ்ண தாஸின் தாயாா் சந்தியா ராணி தாா் (70) வியாழக்கிழமை அதிகாலை காலமானதையடுத்து, அவரின் குடும்பத்தினா் சமா்ப்பித்த கோரிக்கையை பரிசீலித்த பின்னா், சட்ட விதிகளுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 5 மணி நேரத்துக்குள், அவா் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு, மீண்டும் சிறைக்குத் திரும்ப நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.வங்கதேச தேசியக் கொடியை அவமதித்ததாகத் தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கில், சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த 2024 நவம்பரில் கைதானாா். அவருக்கு எதிரான மொத்தம் 6 வழக்குகளில், 4 வழக்குகளுக்கு உயா்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இருப்பினும், தேசத் துரோக வழக்கின் பிணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.