முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அவா் மேற்கொள்ளும் முதல் அரசு முறைப்பயணம் இதுவாகும்.அரசு முறைப்பயணமாக 6 நாள்கள் லண்டனில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈா்ப்பது தொடா்பாக தொழிலதிபா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.புகழ்பெற்ற காா் பந்தய மைதானமான 'சில்வா்ஸ்டோன் மோட்டாா் ரேசிங் சா்க்யூட்' - ஐயும் பாா்வையிட்டு, நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.புதிய முதலீடுகளை ஈர்ப்பதை இந்தப் பயணம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிப்பு.லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் பிரிட்டன் வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.