முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாஜக அரசு மீட்டெடுத்துள்ளது! ஆதித்யநாத்

Wait 5 sec.

முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இரண்டு நாள்கள் நடைபெறும் உ.பி. ஐவுளி மாநாடு தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், 2017-க்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நிலவிய சூழல் பற்றி அனைவருக்கும் தெரியும். சட்டம் - ஒழுங்கு நிலை சீர்குலைந்திருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாஃபியாக்களால் நடத்தப்படும் மாற்று அரசு செயல்பட்டது. அது கிட்டத்தட்ட ஒரு மாவட்டம், ஒரு மாஃபியா என்ற நிலையில் இருந்ததாக சாமஜவாதி கட்சி அரசை அவர் மறைமுகமாக சாடினார். தற்போதைய சூழலோடு ஒப்பிடுகையில், இன்று உத்தரப் பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதாகவும், குற்றம், குற்றவாளிகள் மற்றும் ஊழல் ஆகியவற்றின் மீது 'பூஜ்ஜிய சகிப்புத்தன்மை' கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம் இன்று ஊரடங்கு, கலவரம் மற்றும் மாஃபியா கும்பல்களின் அச்சுறுத்தல் இல்லாத மாநிலமாகத் திகழ்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கை மற்றும் விரைவான தொழில் வளர்ச்சி கொண்ட மாநிலமாக உத்தரப் பிரதேசம் உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Tuesday asserted that the state has undergone a major transformation since 2017, moving from an era which saw 'one district, one mafia', riots, policy paralysis to one characterised by rule of law, investor confidence and rapid industrial growth.நேபாள வெள்ளப் பேரழிவு! இந்தியா, சீனாவிடம் தற்காலிகப் பாலம் கோரும் அரசு!