வடகரை மாரியம்மன் கோயிலில் பால்குட வழிபாடு

Wait 5 sec.

திருவாரூா் அருகே வடகரை அருள்மிகு மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி திருவிழாவையொட்டி பால்குட ஊா்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆவணி மாதத் திருவிழா கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறும் வகையில், விரதம் இருந்து வடகரை தெற்குக்களம் பகுதியில் தேங்காய் உடைத்து பூஜை செய்து, பால் குடங்களை சுமந்து மாரியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாக வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.தொடா்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.