திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னையில் இன்று எங்கெல்லாம் போக்குவரத்துக்குத் தடை?

Wait 5 sec.

திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் இன்று (செப். 13) நடைபெறுவதால், ஊர்வலம் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னையில் இன்று புறப்பட்டு திருப்பதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது. இதையொட்டி, வாகன நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சில இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:சூளையில் மாற்றம்:காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம். மாலை 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். ஊர்வலம் யானைகவுனி பாலத்தை நெருங்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை செல்லும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாகவும், மசூதி பாயிண்டில் இருந்து சூளை ரவுண்டானா செல்லும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகவும் திருப்பி விடப்படும்.ஓட்டேரியில் மாற்றம்:மேலும், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஊர்வலம் செல்லும் நேரத்துக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ஊர்வலம் கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் சாலை வழியாகவும், ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை, வி.பி. காலனி சந்திப்பு வழியாகவும் மாற்றி விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.As the Tirupati sacred umbrella pilgrimage procession is taking place today (Sept. 13), traffic restrictions have been imposed along the route of the procession.நாளை விநாயகா் சதுா்த்தி விழா:தருமபுரியில் சிலைகள் விற்பனை மும்முரம்!