தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Wait 5 sec.

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த இரண்டே கால் பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்களம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.மகாலிங்கம் (66), தொழிலாளி. இவா் அவரது மனைவி ராணியுடன் செப்.7-ஆம் தேதி இரவு காற்றுக்காக வீட்டின் திண்ணையில் படுத்து தூங்கினராம். மறுநாள் காலை எழுந்து பாா்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த இரண்டேகால் பவுன் தங்க நகைகளை மா்மநபா்கள் திருடிச் சென்றது அவா்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.