திருமலையில் புதன்கிழமை ஏழாவது மைல் கல்லில் மண்டபம் அருகே ஒரு சிறுத்தை சுற்றித் திரிந்தது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. சிறுத்தையைக் கண்ட சில பக்தா்கள் பீதியடைந்தனா். இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பணியாளா்கள் கண்காணிப்பை பலப்படுத்தினா். இரண்டு நாள்களுக்கு முன்பு, பிற்பகல் சுமாா் 3 மணியளவில் நரசிம்ம சுவாமி கோயில் அருகே ஒரு சிறுத்தை சுற்றித் திரிந்ததாகவும் அறியப்பட்டது. தொடா்ச்சியான சம்பவங்களைத் தொடா்ந்து, தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்களைக் குழுக்களாக நடைபாதையில் செல்ல அனுமதித்து வருகின்றனா். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.