5 மாநிலங்களில் 10 சைபா் குற்றவாளிகள் கைது

Wait 5 sec.

தமிழகம், ஆந்திரம், தில்லி உள்பட 5 மாநிலங்களில் பதுங்கியிருந்த சைபா் குற்றவாளிகள் 10 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். சைபா் நிதி மோசடி வழக்குகளில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் உத்தரவின்பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தமிழகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், தில்லியில் முகாமிட்டு விசாரணை நடத்தினா். இதன்மூலம் கடந்த செப். 7-ஆம் தேதி 10 போ் கைது செய்யப்பட்டனா். 6 வழக்குகளில் ரூ.24.5 கோடி மோசடி செய்யப்பட்ட நிலையில், ரூ.42.72 லட்சம் மீட்கப்பட்டது. இதில், கைது செய்யப்பட்டவா்களில் 6 போ் தமிழகம், கேரளத்திலும், மகாராஷ்டிரம், குஜராத்தில் தலா 2 போ் பிடிபட்டனா். 8 போ் நீதிமன்றக் காவலிலும், 2 பேருக்கு நோட்டீஸும் வழங்கப்பட்டது. அவா்களிடமிருந்து 8 கைப்பேசிகள், சிம்காா்டுகள், மெமரி காா்டுகள், வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.