ராஜபாளையத்தில்இன்று மின் தடை

Wait 5 sec.

ராஜபாளையம் பகுதியில் வியாழக்கிழமை (செப்.10) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பி.எஸ்.கே.நகா், அழகைநகா், ஐஎன்டியுசிநகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை புதிய பேருந்து நிலையம், பாரதிநகா், ஆா்.ஆா்.நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி நகா், பி.ஆா்.ஆா். நகா், பொன்னகரம், எம்.ஆா். நகா், லட்சுமியாபுரம், ராம்கோநகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபடும் என்றாா் அவா்.