யுஎஸ் ஓபன் மகளிர் அரையிறுதியில் அரினா சபலென்கா அமெரிக்க வீராங்கனை ஜெஸ்ஸிகா பெகுலாவை நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ச்சியாக 4ஆவது முறையாக யுஎஸ் ஓபன் இறுதிக்கு முன்னேறி சபலென்கா சாதனை படைத்துள்ளார். மூன்றாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கிறது.யுஎஸ் ஓபன் அரையிறுதியில் சொந்த மண்ணின் நாயகி ஜெஸ்ஸிகா பெகுலா - பெலாரஸின் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 7-5, 6-2 என நேர் செட்களில் வென்றார். இந்தப் போட்டி 80 நிமிஷங்கள் (1 மணி நேரம் 20 நிமிஷங்கள்) நடைபெற்றன. சபலென்கா நேர் செட்களில் பெகுலாவை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளார். கடந்த 2024, 2025 யுஎஸ் ஓபனில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். 2023ல் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றார். தொடர்ச்சியாக நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள சபலென்காவுக்கு மூன்றாவது கோப்பை வெல்ல நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கிறது. Sabalenka has reached the final of every Grand Slam tournament on hard courts for the last 4 years Australian Open 2023 US Open 2023 Australian Open 2024 US Open 2024 Australian Open 2025 US Open 2025 Australian Open 2026 US Open 2026⏳ pic.twitter.com/G6zN6UCwiS— Aryna Sabalenka Daily (@SabalenkaDaily) September 11, 2026Aryna Sabalenka is into her FOURTH consecutive US Open final! pic.twitter.com/yqCM5X1nku— US Open Tennis (@usopen) September 11, 2026Aryna Sabalenka beats home favourite Jessica Pegula in straight sets to reach fourth US Open final