சாம்பியன்ஸ் லீக்கில் இரண்டு சீசன்களுக்குப் பிறகு பங்கேற்ற சிவப்பு சாத்தான்கள் (ரெட் டெவில்ஸ்) என்றழைக்கப்படும் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றியுடன் தொடங்கியது.இங்கிலாந்தின் பிரபலமான கிளப் மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக் 2026/27 சீசனின் முதல் போட்டியில் ஷபா எஃப்கே அணியுடன் தனது சொந்த மண்ணில் மோதியது. இந்தப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 4-0 என அபார வெற்றியைப் பெற்றது. இதில் மேத்திவ்ஸ் குன்யா 27ஆவது நிமிஷத்திலும் ப்ரூனோ பெர்னாண்டஸ் 42ஆவது நிமிஷத்திலும் பெஞ்சமின் செஸ்கோ 45ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள். முதல் பாதியில் 3-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் கார்னர் கிக்கில் கிடைத்த பந்தை யுனைடெட் அணியின் டிஃபெண்டர் லிஸாண்டரோ மார்டினெஸ் 68ஆவது நிமிஷத்தில் கோலாக மாற்றினார். இந்தப் போட்டியில் 55 சதவிகித நேரம் பந்தை மான்செஸ்டர் யுனைடெட் அணி தன்வசம் வைத்திருந்தது. மொத்தமாக அடித்த 20 ஷாட்டுகளில் 9 முறை இலக்கை நோக்கி அடிக்கப்பட்டது. ஷபா அணி 10 ஷாட்டுகளில் ஒரு முறை மட்டுமே இலக்கை நோக்கி அடித்தது. யுனைடெட் அணி 633 பாஸ்களில் 91 சதவிகித துல்லியத்தை காட்டினார்கள். இரு அணிகளுக்கும் தலா 1 யெல்லோ கார்டு அளிக்கப்பட்டது. @PatrickDorgu13 = the #UCL Player of the Match pic.twitter.com/jsYAx98HX6— Manchester United (@ManUtd) September 10, 202670 ஆண்டுகளில் முதல் வெற்றி..! சாம்பியன்ஸ் லீக்கில் கோமோ 1907 அபாரம்!Manchester United 4-0 Sabah: Winning return to Champions League as Benjamin Sesko scores again for Michael Carrick's side