சட்டப் பேரவையைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்

Wait 5 sec.

சட்டப்பேரவையைக் காண கடந்த 28 நாள்களில் 32,555 பேர் வருகைப் புரிந்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று (செப். 8) தெரிவித்தார். முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20,000 பேர் மட்டுமே சட்டப்பேரவையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. 28 நாட்களாக, மொத்த அலுவல் 170 மணி நேரம் நடைபெற்றது. சட்டப்பேரவை நிறைவு நாளான இன்ரு, உரிமைக்குழு, மனுக்கள் குழு, விதிகள் குழு என்பன உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்ஜெட் மீதான விவாதங்கள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், அமைச்சர்கள் பதிலுரைகள் இக்கூட்டத்தொடரில் நடைபெற்றன.இதனிடையே 28 நாள்கள் நடைபெற்ற இந்தத் தொடரைக் காண 32,555 பேர் வருகைப் புரிந்துள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்தார்.முன்பு ஆண்டுக்கு சராசரியாக 20 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வந்ததாகவும், இம்முறை, 75 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வமாக வந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். முந்தைய ஆண்டுகளில் ஒரு ஆண்டிற்கு சுமார் 20,000 பேர் மட்டுமே சட்டப்பேரவையை நேரில் பார்க்க வந்த நிலையில், இந்த முறை பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாககவும் சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிட்டார். ஆண்டு வாரியாக பார்வையாளர்கள் (28 நாள்கள் மட்டும்)2021 ஆண்டு - 22,651 பேர்2023 ஆண்டு - 20,137 பேர்2024 ஆண்டு - 10,754 பேர்2025 ஆண்டு - 20,123 பேர்2026 ஆண்டு - 32,055 பேர்சட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய்32,555 people visited the Legislative Assembly in 28 days! J.C.D. Prabhakar