சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் பார்சிலோனாவின் கேப்டன் ரபீனியா இணைந்துள்ளார்.பிரேசிலைச் சேர்ந்த ரபீனியா (29 வயது) பார்சிலோனா அணியில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் 5 போட்டிகளில் 8 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நேற்று (செப்.9) முதல் நடைபெற தொடங்கியுள்ளன. ஐரோப்பிய கண்டத்திலேயே கிளப்புகளுக்கான மிகப் பெரிய கால்பந்துத் தொடராக இருக்கின்றது. பார்சிலோனா அணி தனது முதல் சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 5-1 என அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரபீனியா 2 கோல்கள் அடித்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல்கள் அடித்த டாப் 10 பிரேசில் வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். சாம்பியன்ஸ் லீக்கில் 20 கோல்கள் அடித்த ரொமாரியோவை பின்னுக்குத் தள்ளி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். சாம்பியன்ஸ் லீக் டாப் 10 பிரேசில் வீரர்கள் 1. நெய்மர் ஜூனியர் - 43 கோல்கள் 2. வினிசியஸ் ஜூனியர் - 34 கோல்கள் 3. காகா - 30 கோல்கள் 4. கேப்ரியல் ஜீசஸ் - 27 கோல்கள்5. ரிவால்டோ - 27 கோல்கள் 6. ரோட்ரிகோ - 26 கோல்கள்7. ஜர்டேல் - 25 கோல்கள் 8. ஜியோவனி எல்பெர் - 24 கோல்கள்9. ரோபர்டோ ஃபெர்மினோ - 22 கோல்கள் 10. ரபீனியா - 21 கோல்கள்சாம்பியன்ஸ் லீக்: முதல் நாளில் 12 அணிகள் வெற்றி! Most Goals In the Champions League: Raphinha joins the list of top 10 Brazilian players!