நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் ஆன் ஆர்டினரி மேன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரவி மோகன் இயக்குநராக ஆன் ஆர்டினரி மேன் (An ordinary man) என்கிற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இதில் நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்க, ரவி மோகனே தயாரிக்கவும் செய்கிறார்.இத்திரைப்படத்திற்கு கெனிஷா இசையமைக்க உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேற்கத்திய இசை பாணியில் தன் பாடல்களைப் பாடிய கவனம் பெற்றவரான கெனிஷா முதல்முறையாக இசையமைக்க உள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ஹையர் (higher) பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ரவி மோகன், யங் ராஜா இப்பாடலை எழுத யங் ராஜா, ரஞ்சித் ஆகியோர் பாடியுள்ளனர். Details have been released regarding the first song from the film An Ordinary Man, directed by actor Ravi Mohan.