ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆசிய போட்டிகளிலிருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்ஷித் ராணா விலகியுள்ளார்.இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன் பின், வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் ஆசிய போட்டிகள் தொடங்குகின்றன. இதற்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஆசிய போட்டியிலிருந்து ஹர்ஷித் ராணா விலகியுள்ளார். News Yash Thakur replaces Harshit Rana in India’s T20Is squads for Afghanistan T20Is & Asian GamesMore Details ▶️ https://t.co/qh86ExSbgB #TeamIndia | #AFGvIND | #AsianGames— BCCI (@BCCI) September 10, 2026காயம் காரணமாக விலகியுள்ள ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக அணியில் வேகப் பந்துவீச்சாளர் யஷ் தாக்குர் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.27 வயதாகும் யஷ் தாக்குர் அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.சையத் முஸ்டாக் அலி தொடரில் இதுவரை 50 போட்டிகளில் விளையாடியுள்ள யஷ் தாக்குர், 81 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.Indian all-rounder Harshit Rana has withdrawn from the T20 series against Afghanistan and the Asian Games.ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவீர்களா? ரோஹித் சர்மா பதில்!