ஐக்கிய அரபு அமீரகம் உடனான உறவைத் துண்டித்த அல்ஜீரியா!

Wait 5 sec.

முன்னணி வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் உடனான அனைத்து உறவுகளையும் அல்ஜீரியா அரசு துண்டித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தூண்டுதல் மற்றும் விரோதப் போக்குடைய செயல்களாலும், வருந்தத்தக்க நியாயமற்ற நடத்தைகளாலும் அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துகொள்வதாகக் குறிப்பிட்டு அல்ஜீரியா வெளியுறவு அமைச்சகம் இன்று (செப். 10) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த முடிவுக்கான எந்தவொரு தனிப்பட்ட அல்லது குறிப்பிட்ட காரணமும் அல்ஜீரியா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து, அமீரகத்தின் தூதர் நேரில் அழைக்கப்பட்டு அவரிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், நடவடிக்கைகளுக்கு உடன்பட 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேல் உடன் உறவுகளை மேம்படுத்தி வருகின்றன. இதனால், அல்ஜீரியா மற்றும் அமீரகம் இடையேயான உறவுகளில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்துடன், மேற்கு சஹாரா விவகாரத்திலும் அல்ஜீரியா மற்றும் அமீரகம் இடையே முரண்பாடு நிலவி வருகிறது. மேற்கு சஹாராவை சுதந்திர நாடாக அங்கீகரிக்க அல்ஜீரியா ஆதரவு தெரிவித்து வருகிறது. ஆனால், மேற்கு சஹாராவை மொராக்கோவின் ஒரு பகுதியாக அமீரக அரசு அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.யேமனில் முக்கிய துறைமுகத்தை கைப்பற்றிய ஹௌதிகள்! வெளியேறும் அரசுப் படைகள்! The Algeria has announced that it is severing all ties with the United Arab Emirates, a leading Gulf nation.