அடுத்தக் கட்டத்தை நோக்கி பயணிக்க உள்ளேன்: முகமது ஷமி

Wait 5 sec.

தனது கிரிக்கெட் பயணத்தில் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வந்த துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டலம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் கிழக்கு மண்டலம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.இந்தப் போட்டியில் கிழக்கு மண்டலம் அணிக்காக விளையாடிய முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பை வழங்கினார்.இந்த நிலையில், தனது கிரிக்கெட் பயணத்தில் அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஊக்கத்தோடு விளையாடுவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் நான் இப்போது ஊக்கத்தோடு செயல்படாவிட்டால், என்னுடைய அணுகுமுறை தவறாக உள்ளது என்றே கூற வேண்டும். கிரிக்கெட் பயணத்தின் எந்த ஒரு காலக் கட்டத்தில் வீரர் ஒருவர் இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக அடுத்தக் கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.என்னுடைய 100-வது முதல் தர போட்டியில் துலீப் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மிகவும் சிறப்பான உணர்வைத் தருகிறது. கிழக்கு மண்டலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. நாங்கள் மிகவும் சிறப்பாக விளையாடினோம் என்றார்.இந்திய அணிக்காக முகமது ஷமி கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விளையாடியிருந்தார். அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்திய அணிக்காக அவர் டெஸ்ட் போட்டிகளில் கடந்த 2023 ஆம் ஆண்டு விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. Indian fast bowler Mohammed Shami has stated that he is set to move to the next phase of his cricketing journey.பிக் பாஷ் தொடரில் விளையாட மறுத்த மிட்செல் சாண்ட்னர்; காரணம் என்ன?