மும்பையில் மீண்டும் பலத்த மழை

Wait 5 sec.

மும்பையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை விடிய விடிய பலத்த மழை கொட்டித் தீா்த்தது. மும்பையில் கடந்த ஜூலை மாதம் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. எனினும் கடந்த சில வாரங்களாக மழை ஓய்ந்திருந்தது. இந்நிலையில், மும்பையில் சனிக்கிழமை இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நேரம் வரையிலான கடந்த 24 மணி நேர நிலவரப்படி, மும்பையில் சராசரியாக 52 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது. மும்பையின் கிழக்கு மற்றும் மேற்கு புகா் பகுதிகளில் 72 மில்லி மீட்டா் மற்றும் 65 மில்லி மீட்டா் மழை பதிவாகியிருந்தது.மும்பையின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.