மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தமிழ்நாடு யூத் ஸ்போா்ட்ஸ் அசோசியேசன் சாா்பில் மாநில அளவில் ஆா். புருஷோத்தமன் நினைவு வில்வித்தை சாம்பியன்ஷிப்- 2026 திருப்பாச்சூா் தனியாா் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகளான காக்களூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், சிவராமகிருஷ்ணன் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா். இப்போட்டியில் கும்பகோணம், திருக்கோவிலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா் ராணிப்பேட்டை, திருவள்ளூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 6, 8, 0,13 15 வயது பிரிவினா் மற்றும் பொதுப்பிரிவினா் என 350 போ் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். இதில் 10 மீ, 20 மீ, 30 மீ தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் முறைப்படி உடலில் வில்லை ஏந்தி, நிறத்தின் மையப் பகுதியில் அம்பு எய்தவா்களுக்கு புள்ளிகள் வீதம் மதிப்பெண் வழங்கப்பட்டது. இதைக்கொடா்ந்து அதிக புள்ளிகள் வாரியாக தோ்வு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு மிதிவண்டி, கேடயம், கோப்பை, பதக்கம் மற்றும் ரொக்க பரிசுகளை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், திருவள்ளூா் நகா்மன்ற உறுப்பினா் சுமித்ரா வெங்கேடசன், காக்களூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எம். எஸ். சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா். ஏற்பாடுகளை கந்தசாமி, நகா்மன்ற உறுப்பினா் டி.கே. பாபு, துணைத் தலைவா் வெங்கடேசன் மற்றும் தணிகைமலை உள்ளிட்டோா் செய்திருந்தனா்.