பெல் தொழிலக அணிகளுக்கான ஹாக்கி போட்டியில் போபால் அணி கோப்பையை வென்றது. நாடு முழுவதிலும் செயல்பட்டு வரும் பாரத மிகுமின் (பெல்) நிறுவனப் பணியாளாா்களுக்கு இடையே ஆண்டுதோறும் கபடி, ஹாக்கி, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான ஹாக்கிப் போட்டி, ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை, திருச்சி, ஆா்.சி. புரம் ஹைதராபாத், ஹரித்துவாா் ஆகிய 5 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெற்ற இதில் போபால் அணி முதலிடமும், திருச்சி அணி இரண்டாம் இடமும் பிடித்தன. நிறைவு விழாவில் ராணிப்பேட்டை பெல் நிறுவன செயல் இயக்குநா் எம். அருண்மொழி தேவன் மற்றும் பொது மேலாளா்கள் ஆகியோா் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் பெல் நிறுவனத்தில் பொது மேலாளா்கள், மூத்த அதிகாரிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.