ஆம்பூா் அருகே கிராமத்தில் புளியமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. மாதனூா் ஒன்றியம், வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் உள்ள புளிய மரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அதை பாா்த்த பொதுமக்கள் ஆம்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீயை அணைத்தனா்.