துல்கர் சல்மானின் ஸ்ரீ ஸ்ரீ வெளியீட்டுத் தேதி!

Wait 5 sec.

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் ஸ்ரீ ஸ்ரீ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே இணைந்து இயக்குநர் ரவி நெலகுதிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்தப் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஸ்ரீ ஸ்ரீ எனப் பெயரிட்டுள்ளதாக அண்மையில் போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தனர்.இந்த நிலையில், இப்படம் டிச. 4 ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஆம் கேம் திரைப்படத்தைத் தொடர்ந்து திரைக்கு வரும் துல்கர் சல்மான் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவாக அதிக பார்வைகளைப் பெற்ற மம்மூட்டி கிளிம்ஸ்! Information regarding the release date of the film Sri Sri, starring actor Dulquer Salmaan, has been revealed.