அதனால்தான் துல்கர் சல்மானுடன் நடிப்பதில்லை: ஐஸ்வர்யா லட்சுமி

Wait 5 sec.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகர் துல்கர் சல்மானுடன் தொடர்ந்து இணைந்து நடிக்காதது குறித்து பேசியுள்ளார். தமிழ், மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இறுதியாக, இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி - 2 திரைப்படமும் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. மலையாளத்தில் இவர் நடிப்பில் உருவான ஆஷா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, ”கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானை நான் ’ராஜூவேட்டா’ என்றே அழைப்பேன். ஆனால், ரசிகர்களிடம் அது கேலி, கிண்டலாக மாறியது. முக்கியமாக, ஹலோ மம்மி திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது, அப்படத்தின் உதவி இயக்குநர் என்னை ராஜூவேட்டா என அழைத்துக் கிண்டல் செய்தார். இந்த எதிர்மறையான விமர்சனங்கள் என்னை மனதளவில் பாதித்தது. இதனால், இனிமேல் நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்க மறுத்துவிடலாம் என நினைத்தேன். அதேபோல், அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும்போதெல்லாம் மறுத்தும் வருகிறேன். ஓணம் பண்டிகைக்காக ஒரு விளம்பரப் படத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், மீண்டும் ஏதாவது கேலி, கிண்டல்கள் நிகழ்ந்து என்னால் அந்த விளம்பரப்படமும் பாதிப்பைச் சந்திக்கக்கூடாது என அதனையும் மறுத்துவிட்டேன்.” எனத் தெரிவித்துள்ளார். கர்வமாகவே சொல்கிறேன்... எவனும் இல்லை... இளையராஜா பேச்சு வைரல்! Actress Aishwarya Lekshmi has spoken about not having acted alongside actor Dulquer Salmaan.