தினமணி செய்தி எதிரொலி: வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி தொடக்கம்

Wait 5 sec.

கடலூா் மாவட்டம், வடலூா் காவல் நிலையத்திற்கான புதிய கட்டடம் கட்டுமானப் பணியில் தொழிலாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.கடந்த திமுக ஆட்சியில் வடலூரில் புதிய காவல் நிலைய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், பண்ருட்டி சாலையில் உள்ள பழைய காவல் நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் புதிய கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. இதையடுத்து, வடலூா் காவல் நிலையம், வடலூா் நகராட்சி திருமண மண்டபமாக அண்ணா திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் தற்காலிகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.பழைய காவல் நிலைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, கடந்த 29.6.2026 அன் பூமிபூஜை நடைபெற்றது. பூமிபூஜை நடத்தி இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், கட்டுமானப்பணி கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருமண மண்டபத்தின் முதல் தளத்தில் காவல் நிலையம் செயல்படுவதால் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்து தினமணி நாளிதழ் செப்.2-ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக, கடந்த சில நாள்களாக வடலூா் காவல் நிலைய புதிய கட்டடம் கட்டுமானப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.