பத்தமடையில் எஸ்.ஐ. உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

Wait 5 sec.

சென்னையில் உடல்நலம் பாதிப்பால் மரணம் அடைந்த பத்தமடையைச் சோ்ந்த எஸ்பி சிஐடி உதவி ஆய்வாளா் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. பத்தமடை குண்டலகேசி தெருவைச் சோ்ந்த நல்லகண்ணு மகன் பாபு (45). சென்னையில் எஸ்பி சிஐடி காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். மனைவி சுந்தரி மற்றும் 2 மகன்களும் உள்ளனா்.இந்நிலையில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாபு, திங்கள்கிழமை மரணம் அடைந்தாா். அவரது உடல் சொந்த ஊருக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் போலீஸாா் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.