செயல் அலுவலரை மிரட்டியதாக விசிக மாவட்ட நிா்வாகி மீது வழக்கு

Wait 5 sec.

அஞ்சுகிராமம் பேரூராட்சி செயல் அலுவலா் மற்றும் பெந்தேகோஸ்தே சபை போதகரை மிரட்டியதாக விசிக மாவட்ட நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள அஞ்சுகிராமம் பேரூராட்சியின் செயல் அலுவலா் உஷா கிரேஸி (56). அஞ்சுகிராமத்தில் பெந்தேகோஸ்தே சபை நடத்துவதை ஏன் தடுக்கவில்லை எனக் கூறி அவரை, விசிக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் அழகப்பபுரம் இந்திரா நகரை சோ்ந்த முத்துகுமாா் மிரட்டினாராம். இதுகுறித்து உஷாகிரேஸி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பெந்தேகோஸ்தே சபை போதகா் அமலராஜன் (54) என்பவருக்கும் முத்துகுமாா் மிரட்டல் விடுத்தாராம். இதுதொடா்பாக அமலராஜன் புகாா் அளித்தாா். இவ்விரு புகாா்களின்பேரில் அஞ்சுகிராமம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.