9.9.1976: உலகில் எல்லா நாடுகளையும் மிரள வைக்கும் யந்திரம்! எந்த நாட்டு நோட்டையும் அப்படியே அச்சிடுகிறது

Wait 5 sec.

சென்னை, செப்: 7- எந்த நாட்டின் நோட்டையும் செக்கையும் தஸ்தாவேஜையும் அப்படியே அசல்போல் கள்ளத்தனமாகத் தயாரிக்கக்கூடிய ஒரு யந்திரத்தை ஓர் ஐரோப்பிய நாடு உற்பத்தி செய்திருக்கிறது.இந்த யந்திரம் ஒரு நோட்டை அல்லது தஸ்தாவேஜை அச்சிட்டு விட்டால் அசல் எது போலி எது என்பதை கண்டுபிடிப்பது முடியாத காரியம் என்று முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஃப். வி. அருள் இன்று இங்கு கூறினார்.இங்கு நகர மாதர் கல்லூரி ஒன்றில் "சர்வதேச போலீஸ்" என்பது குறித்து அவர் பேசினார்.இந்த யந்திரம் தயாரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு சர்வதேச போலீஸ் மட்டுமல்ல, உலக நாடுகளின் அரசுகள் கூட அதிர்ச்சி அடைந்துள்ளன. மேற்கண்ட யந்திரத்தை வைத்துள்ள நாட்டிடம் அதை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும்படியும் இல்லாவிட்டால் மோசடிக் கருத்துள்ளவர்கள் அதை பெற்று மோசடி செயல்களில் ஈடுபட்டு விடுவார்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார். ...த.நா. அரசு தொழில் வாரியங்கள் குறித்து ஆய்வுசென்னை செப். 8 - தொழில் துறையில் உள்ள அரசாங்க கார்ப்பரேஷன்கள் செயல்படும் விதம், அவற்றின் எண்ணிக்கையைக் குறைத்து ஒருங்கிணைக்க வேண்டுமா என்பது உள்ளிட்ட பல வகையான அம்சங்களையும் ஆராய்வதற்காக உயர் மட்டக் குழுவை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.முன்னாள் தொழில் அமைச்சரும், மத்திய திட்டக் குழுவின் முன்னாள் உறுப்பினருமான ஆர். வெங்கட்ராமன் தலைமையில் அமையவிருக்கும் இந்தக் குழுவில், தலைவரையும் சேர்த்து மொத்தம் ஐந்து உறுப்பினர்கள் இருப்பார்கள்.மேற்கண்ட தகவலை கவர்னரின் ஆலோசகர் ஆர். வி. சுப்ரமணியன் இன்று கோட்டையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.கடந்த காலத்தில் தொழில் துறையில் பல்வேறு தொழில் நிறுவன கார்ப்பரேஷன்கள் (வாரியங்கள்) நிறுவப்பட்டுள்ளது. டான்சி, டிட்கோ, சிட்கோ, தொழில் வளர்ச்சி முதலீட்டுக் கழகம் என்பன போன்ற மொத்தம் 12 வாரியங்கள் இவ்வாறு உள்ளன. இவற்றிற்காக தனி வாரியங்கள் அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவப்பட்ட இந்த வாரியங்களின் நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியுள்ளது? எண்ணிக்கை அதிகம் காரணமாக இவற்றில் குறைபாடுகள் உள்ளனவா, இவற்றில் பலவற்றைச் சிக்கன நடவடிக்கையுடன் ஒருங்கிணைத்து எண்ணிக்கையைக் குறைக்கலாமா, இத்தனை வாரியங்கள் தேவைதானா, இவற்றை எப்படி சீரமைப்பது, எந்த வகையாக இணைப்பு செய்வது, இப்படிச் செய்வதால் தொழில் துறையில் நிறுவப்பட்டுள்ள வாரியங்கள் பணிமுறை செம்மையாகச் செயல்படுமா என்பவை உள்ளிட்ட முறையான, சீரான ஆய்வு நடத்தி, இந்தத் தொழில் நிறுவன வாரியங்களை எப்படி மாற்றி அமைக்கலாம் என்பது குறித்து அரசுக்கு இந்த உயர்மட்டக்குழு அறிக்கை கொடுக்கும்படி கோரப்பட்டுள்ளது. ... September 9, 1976: A machine that leaves every country in the world astounded! It prints banknotes of any nation exactly as they are.8.9.1976: சர்க்காரியா கமிஷன் தினசரி விசாரணை சென்னையில் அக்டோபர் மாதம் நடக்கலாம்