செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டத்தில் நாளை மின் நிறுத்தம்

Wait 5 sec.

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (செப்.10) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது என தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் தெரிவித்தாா். மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, உடையாா்விளை, லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், கீழ்க்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்சந்தை, இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூா், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, நடுவூா்கரை, ஐஆா்இ பகுதி, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை, பிள்ளையாா்கோவில், கடியப்பட்டிணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சாா்ந்த துணை கிராமங்களுக்கும் வியாழக்கிழமை (செப். 10) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.