தோல்வியிலும் ஆட்ட நாயகி விருது வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா!

Wait 5 sec.

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி வென்றார். அந்த அணி தோல்வியுற்ற போதிலும் அவரது ஆட்டம் பலரையும் வியக்க வைத்தது. நேற்றிரவு துபையில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 130/5 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாத்திமா சனா 36 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 18.4 ஓவர்களில் 134/6 ரன்கள் எடுத்து வென்றது. இதில் அதிகபட்சமாக ஹர்சிதா சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பில் பந்துவீச்சில் கேப்டன் ஃபாதிமா சனா 3.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் அந்த அணி தோல்வியடைந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தனியாளாக அசத்திய ஃபாத்திமா சனா ஆட்ட நாயகி விருது வென்றார். பல போட்டிகளில் அவர் மட்டுமே நன்றாக விளையாடி அணி தோல்வியடைவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. Captain leading from the front! 47* with the bat and 4/38 with the ball in the Asia Cup semi-final #FatimaSana #WomensAsiaCup pic.twitter.com/GKSAlEi4d7— WomenCricket.com (@WomenCricketHQ) September 12, 2026அறிமுக டெஸ்ட்டில் டி20 ஆடிய பாகிஸ்தான் வீரர்..! இங்கிலாந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் ரஸாவுல்லா!Pakistan captain Fatima Sana wins Player of the Match award despite the loss!