நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் பிரிட்டன் கார் பந்தயத்தைக் காண நடிகை த்ரிஷா நேரில் சென்றுள்ளார்.தமிழக முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பிரிட்டன் பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு, நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் பங்கேற்கும் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் பிரிட்டனில் இன்று தொடங்கி வைத்தார்.இதுதொடர்பான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை கார் பந்தயத்தை நடத்தும் ’லீ மேன்ஸ்’ அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில், அஜித்தின் அழைப்பின் பேரில் முதல்வர் விஜய் அங்கு சென்றார்.கார் பந்தயம் நடைபெறும் களத்திற்கு சென்ற முதல்வர் விஜய் அங்கு அஜித் குமாரை ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இதனைத் தொடர்ந்து, அவர் அஜித் குமார் பங்கேற்கும் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு முன்னதாக இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட நிலையில், அஜித்தின் கார் மீது அமர்ந்து விஜய் போட்டோ எடுத்தார். பின், அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார் முதல்வர் விஜய்.இந்த நிலையில், கார் பந்தயம் நடைபெறும் தளத்திற்கு நடிகை த்ரிஷா நேரில் சென்றுள்ளார். நடிகை ராதிகாவுடன் பிரிட்டனில் த்ரிஷா எடுத்த புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், இன்று அவர் பந்தயத் தளத்திற்குச் சென்றுள்ளார். அஜித்தின் அழைப்பின் பேரில் த்ரிஷா அங்கு சென்றதாகக் கூறப்படுகிறது. Actress Trisha has gone in person to watch the British car race in which actor and car racer Ajith Kumar is participating.அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!