அன்பில் அவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

Wait 5 sec.

அன்பில் அவன் படத்தின் ‘கல்லா நிக்குறியே’ பாடல் இன்று வெளியானது.அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.நீண்ட நாள்களாக அசோக் செல்வன் நடிப்பில் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது ’அன்பில் அவன்’ படத்தின் வெளியீடு அவரது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்தின் முதல் பாடலான ஆசை வரமே முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்தப் பாடலான ‘கல்லா நிக்குறியே’ இன்று வெளியாகியுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் செப். 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.The song 'Kalla Nikkuriye' from the movie Anbil Avan was released today.மாரி செல்வராஜின் மஞ்சணத்தி: படப்பிடிப்பு க்ளிம்ஸ் வெளியீடு!