அறிமுக வர்த்தகத்தில் 10% உயர்வுடன் நிறைவு செய்த தீபா ஜூவல்லர்ஸ்!

Wait 5 sec.

புதுதில்லி: தீபா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய அறிமுக வர்த்தகத்தில், அதன் வெளியீட்டு விலையான ரூ. 177 ஐ விட கிட்டத்தட்ட 10 சதவீதம் கூடுதல் விலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.மும்பை பங்குச் சந்தையில், அதன் வெளியீட்டு விலையை விட 24.88 சதவீதம் அதிகரித்து, இந்த பங்கு ரூ. 221.05 க்கு வர்த்தகத்தைத் தொடங்கி, இறுதியில் 9.77 சதவீதம் உயர்ந்து ரூ. 194.30 ஆக நிறைவடைந்தது.நிஃப்டி-யில், இந்த பங்கு 24.85 சதவீதம் உயர்ந்து ரூ. 221 க்கு பட்டியலிடப்பட்டது. பிறகான வர்த்கத்தில், இந்த பங்கு 9.81 சதவீதம் உயர்ந்து ரூ. 194.37 ஆக நிறைவடைந்தது. இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1,867.70 கோடியாக உள்ளது.பல்வேறு முதலீட்டாளர் பிரிவினரிடமிருந்தும், குறிப்பாக நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்தும் கிடைத்த வலுவான வரவேற்பால், தீபா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு விண்ணப்பங்கள் இறுதி நாளான வியாழக்கிழமையன்று கிட்டத்தட்ட 43 மடங்கு அதிக சந்தா வசூலிக்கப்பட்டது.ரூ. 460 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ-வின் விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு ரூ. 168 முதல் ரூ. 177 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.Shares of Deepa Jewellers Ltd on Tuesday ended with a premium of nearly 10 per cent.ஆகஸ்ட் மாதம் மின்சார வாகன விற்பனை 53 சதவீதமாக அதிகரிப்பு!