மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வங்கதேச கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 8) வெளியிட்டுள்ளது.இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மிர்பூரில் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 5 ஆம் தேதி சில்ஹட்டிலும் தொடங்குகிறது. இந்த பிரதான போட்டிகளுக்கு முன்பாக இரு அணிகளும் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடவுள்ளன.The Windies are coming to Bangladesh! Get ready for an exciting Test series as the West Indies take on Bangladesh in the 2025–27 ICC World Test Championship. 3-Day Warm-up Match: 22–24 Oct | Bashundhara Sports Complex, Dhaka1st Test: 28 Oct–1 Nov | Sher-e-Bangla… pic.twitter.com/sDfo8ytCAS— Bangladesh Cricket (@BCBtigers) September 8, 2026அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்த வங்கதேச அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் 8-வது இடத்தில் உள்ளது. இரண்டு அணிகளுக்குமே இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும்.வங்கதேசம் - மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர் அட்டவணைமுதல் டெஸ்ட் - அக்டோபர் 28 - நவம்பர் 1, மிர்பூர்இரண்டாவது டெஸ்ட் - நவம்பர் 5 - நவம்பர் 9, சில்ஹட்The Bangladesh Cricket Board has announced the schedule for the Test series against the West Indies today.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!