தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Wait 5 sec.

தமிழகத்தில் 27 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. ரவிக்குமார், வேளாண்மை - உழவர் நலத்துறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையர் ஸ்ரேயா சிங் பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை இணை ஆணையராக ஞானதேவ் ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை இயக்குநர் ஜெயசீலன் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை இயக்குநராக ராஜகோபால் சுங்கரா, விருதுநகர் ஆட்சியராக இருந்த சுகபுத்ரா சென்னை குடிநீர் வழங்கல் கழிவுநீரகற்று வாரிய நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்IAS officers transferred in Tamil Nadu