புது தில்லியில் இன்று (செப். 12) நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல என்று பேசினார்.உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் உச்சி மாநாடு புது தில்லியில் இன்றும் நாளையும் (செப். 12 - 13) நடைபெறுகிறது. புது தில்லியில் 12) 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.இந்த அமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. ஏற்கெனவே 3 முறை இப்பொறுப்பை இந்தியா வகித்துள்ளது. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்பிரிக்ஸ் அமைப்பு - யாருக்கும் எதிரானது அல்ல!பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு, எந்தவொரு நாட்டிற்கும் அல்லது குழுவிற்கும் எதிரானது அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் உலக அரங்கில் பிரிக்ஸ் அமைப்பு ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் எங்களுடைய கருத்துகளை மதிக்கிறோம், ஒருமித்த கருத்துகளின் மூலமாக முன்னேறுகிறோம். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. அனைவரையும் உள்ளடக்கிய முன்னேறும் அணுகுமுறையை பின்பற்றுகிறோம். விதிமுறைகளை உருவாக்க வேண்டும் உலக நெருக்கடிகளில் தெற்கு நாடுகள் (குளோபல் சவுத்) முன்னணியில் இருந்தாலும், முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவை பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. விதிகளை பின்பற்றுபவர்கள் என்றில்லாமல் 'விதிமுறைகளை உருவாக்குபவர்கள்' என்ற நிலைக்கு மாற வேண்டும். அதற்கு பிரிக்ஸ் நாடுகள் உதவ வேண்டும். செய்யறிவு, இணையவெளி, விண்வெளி, உயிரித் தொழில்நுட்பம் போன்றவை எதிர்கால வாய்ப்புகளை வடிவமைப்பது மட்டுமல்லாமல், எதிர்கால விதிமுறைகளையும் உருவாக்கும். தற்போது உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பு ஒரு பிரமிடு போன்ற தோற்றத்தை அளிக்கிறது. அதன் உச்சியில் அதிகாரமும் முடிவெடுக்கும் திறனும் உள்ளதால் அடிப்பகுதியில் உள்ள நாடுகள் அவர்களின் முடிவுகளால் பாதிக்கப்படுகின்றன. பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதுடன் இதுபற்றிய உலகளாவிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். உலகளாவிய விதிமுறைகளை வரையறுப்பதில் சமமான பங்கேற்பை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமை எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் அனைத்து நாடுகளுக்கும் சமமான குரல் இருக்க வேண்டும். சம உரிமை இருக்க வேண்டும். இந்தியா நடத்தும் இந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் செய்தி தெளிவாக இருக்க வேண்டும். குரல் கொடுப்பதில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வரை பிரிக்ஸின் வழிகாட்டும் தீர்மானம் இருக்க வேண்டும். 4. ஐ.நா. பாதுகாப்பு அவை சீர்திருத்தம் தேவை ஐ.நா. பாதுகாப்பு அவையின் சீர்திருத்தத்தை இனிமேலும் தாமதிக்க முடியாது. தற்போதைய உலகப் பொருளாதார நிலையைப் பிரதிபலிக்கும் வகையில், சர்வதேச நிதி நிறுவனங்களில் வாக்களிக்கும் உரிமைகள், தலைமைப் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். செயல்படுத்தும் வழிமுறை பிரிக்ஸ் கூட்டமைப்பால் எடுக்கப்படும் முடிவுகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பிரிக்ஸ் முடிவுகளை செயல்படுத்தும் வழிமுறையை பிரதமர் மோடி முன்மொழிந்தார். கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றம் இறுதியாக, வர்த்தகத்தை சிதைக்கும் ஒருதலைபட்சமான வரி விதிப்புக்கு எதிராக, நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 'புதுதில்லி பிரகடன'த்துக்கு பிரிக்ஸ் நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல ஜம்மு- காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைக் குறிப்பிட்டு 'பயங்கரவாத தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது' என்று பிரிக்ஸ் அமைப்பு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. Global South must be rule-shaper, India ready to take lead: PM Modi at Brics Summit