கண்டது...(நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் ஆட்டோவில் கண்ட வாசகம்) 'இந்த உலகில் சந்தோஷமாக இருப்பவர்கள் இருவர்... ஒருவர் கல்யாணம் பண்ணாதவர்; மற்றவர் செல்போன் இல்லாதவர்!' -நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி. (வேலூரில் வேன் ஒன்றில் இடம்பெற்றிருந்த வாசகம்) 'வான் மழையால் உலகம் செழிக்கும்... கருணை மழையால் மனிதம் சிறக்கும்!' -ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம். (விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)'நமஸ்கரித்தான்பட்டி.'- ச.ஜான்ரவி, கோவில்பட்டி.கேட்டது... (கோவையில் கட்சி அலுவலகம் ஒன்றில்)'தலைவருக்கு ரொம்ப காஸ்ட்லியான மாலை போட்டீங்களாமே?''ஆமா... சின்ன வெங்காயமும் பெரிய வெங்காயமும் கோத்துக் கட்டி மாலை போட்டோம்!'-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம். ( மதுரை பேருந்தில் இருவர்) 'பத்து வருஷமா கொடுத்த வீட்டு வாடகைக்கு சொந்தமாக வீடே வாங்கி இருக்கலாம்!''நீ வேற... நான் வாங்கிய வீட்டுக் கடனுக்கு பத்து வருஷமா வட்டிதான் கட்டிக்கிட்டு இருக்கேன்... அசல் அப்படியே இருக்கு!' -நா.குழந்தைவேலு, மதுரை. யோசிக்கிறாங்கப்பா...'பொய்க்கு ஆரம்பம் இல்லை. ஆனால், முடிவு உண்டு. உண்மைக்கு ஆரம்பம் உண்டு. ஆனால், முடிவு இல்லை.-எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.