எங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும்: இலங்கை கேப்டன்

Wait 5 sec.

திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் தங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.துபையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இந்த இரண்டு அணிகளுக்குமான இறுதிப்போட்டி நாளை (செப்டம்பர் 13) துபை சர்வதேசத் திடலில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் கேப்டன் சமாரி அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஹர்ஷிதா மற்றும் கவிஷா இருவரும் மிக அற்புதமாக பேட்டிங் செய்தனர். அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடி அணிக்காக ரன்கள் சேர்த்தனர். அவர்கள் இருவரும் போட்டியை வென்று கொடுத்தனர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இறுதிப்போட்டியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்தினால், எங்களால் எந்தவொரு அணியையும் வீழ்த்த முடியும் என நினைக்கிறேன் என்றார்.Sri Lanka captain Chamari Athapaththu has stated that they can defeat any team if they execute their plans correctly.சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!