மீசைய முறுக்கு - 2 டிரைலர் வெளியானது!

Wait 5 sec.

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு - 2 படத்தின் டிரைலர் வெளியானது!ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ’மீசைய முறுக்கு’. அப்படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களில் ஆதி நாயகனாக நடித்தார்.இந்த நிலையில், நடிகை குஷ்புவின் அவ்னி மூவீஸ் தயாரிப்பில் மீசைய முறுக்கு படத்தின் இரண்டாவது பாகமான மீசைய முறுக்கு - 2 படத்தை ஆதி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். இப்படத்தில் கேத்திகா ஷர்மா, சைத்ரா ஆச்சர், ரம்யா ரங்கநாதன், யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஆரா 10/10, கோய்ந்தம்மா போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே பெரியளவில் ஹிட் அடித்துள்ளன.இந்த நிலையில், மீசைய முறுக்கு - 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இசைக்கலைஞர்கள் பற்றி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அப்பா - மகன் கதாபாத்திரங்களில் ஆதி நடித்துள்ளதாகத் தெரிகிறது.மீசைய முறுக்கு - 2 திரைப்படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. The trailer of the movie Meesaya Murukku - 2 starring Hip Hop Tamizha Aadhi has been released!நடிப்பு, இசை என தொடர் வெற்றிகளைக் குவிக்கும் ஜிவி பிரகாஷ்!