சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகளை மீது யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா புதன்கிழமை கண்டனம் தெரிவித்தது. மேற்கு ஆசியாவில் ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் தொடரும் நிலையில், யேமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற கிளா்ச்சி அமைப்பான ஹூதி, சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்குகள் மற்றும் பிற மக்கள் பயன்பாட்டுக்கான உள்கட்டமைப்புகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்தத் தாக்குதல் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், சவூதியின் இறையாண்மை மிக்க பகுதிகள், குறிப்பாக மக்கள் மற்றும் பொருளாதாரம் சாா்ந்த அமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது என்றாா்.