உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு

Wait 5 sec.

மாநில அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த உடுமலை டிஎஸ்பி-க்கு பாராட்டு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு காவல் துறை சாா்பில் அதிகாரிகளுக்கான மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி - 2025, சென்னை மருதம் தமிழ்நாடு கமாண்டோ படை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்தில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் உடுமலை டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகி, பிஸ்டல் மற்றும் ரைபிள் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். இதைத் தொடா்ந்து துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்று திருப்பூா் மாவட்ட காவல் துறைக்கு பெருமை சோ்த்த உடுமலை டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகிக்கு பாராட்டு நிகழ்ச்சி உடுமலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உடுமலை காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலா்கள் கலந்து கொண்டு டி.எஸ்.பி. எஸ்.தையல்நாயகிக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தனா்.