சுற்றுச்சூழல்: சாபமாக்கப்பட்ட வரம்!

Wait 5 sec.

காற்று மாசு காரணமாக சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 11 ஆயிரம் பேர் இறப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.11,000 கோடி பொருளாதார இழப்பு ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. உலக நலவாழ்வு அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட காற்று மக்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னை மாநகர மக்களின் வாழ்நாள் நான்கு ஆண்டுகள் அதிகரிக்கக்கூடும்.இதற்காக 2019-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய தூயக் காற்றுத் திட்டத்தில் 2021-ஆம் ஆண்டில் சென்னை மாநகரம் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், இந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 90% பணிகள் நிறைவேற்றப்படவில்லை.அது மட்டுமின்றி, சென்னைக்கு காற்று மாசு எங்கிருந்து, எந்த அளவுக்கு வருகிறது என்பதை அறிய ஐஐடி மூலம் 2022-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை இப்போது வரை வெளியிடப்படவில்லை. இதில் நாம் தலைகுனிய வேண்டிய செய்தி என்னவென்றால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இந்தியாவில் சென்னை கடைசி இடத்தைப் பிடித்திருப்பதுதான். அதேபோல், தமிழ்நாட்டுக்கான "தூய காற்று திட்டம்' 31.01.2025 அன்று உருவாக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.நகரங்களில் உருவாகும் குப்பையில் 30% முதல் 40% அளவு குப்பைகளை மொத்தக் கழிவு உற்பத்தியாளர்கள் தான் காரணமாக உள்ளனர். 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான பரப்பு, ஒரு நாளுக்கு 40,000 லிட்டர் தண்ணீர் பயன்பாடு, அல்லது ஒரு நாளில் 100 கிலோகிராமுக்கு கூடுதலாக குப்பை உருவாக்கும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவை மொத்தக் கழிவு உற்பத்தியாளர் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். முழுக் கட்டுரையும் படிக்க...