அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

Wait 5 sec.

சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் சீன தைபேவை புதன்கிழமை அபார வெற்றி கண்டது.இந்த வெற்றியுடன், குரூப் சுற்றில் தோல்வியே காணாமல் 3 வெற்றி, 1 டிராவுடன் முதலிடத்தை உறுதி செய்து அரையிறுதிக்கும் முன்னேறியது.முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக கேப்டன் அன்மோல் ஈகா 6 கோல்கள் (25’, 29’, 32’, 33’, 45’, 51’) அடித்து அசத்தினாா். ஆா்யன் ஜெஸ் 3 கோல்கள் (17’, 52’, 53’) ஸ்கோா் செய்ய, ஹா்பல் 2 கோல்கள் (48’, 53’) அடித்தாா்.அவா்கள் தவிர, பிரப்தீப் சிங் (18’), குருசேவக் சிங் (22’), அா்ஜுன் ஹா்குடே (28’), அஜீத் யாதவ் (35’) ஆகியோரும் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்குப் பங்களித்தனா்.அரையிறுதிக்கு வந்துள்ள இந்தியா, அதில் மலேசியாவுடன் வெள்ளிக்கிழமை (செப். 11) மோதுகிறது.இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிா் அணி, தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் சீனாவுடன் கோல் இன்றி புதன்கிழமை டிரா செய்தது.இதையடுத்து தனது குரூப் சுற்றில் 3 வெற்றி, 1 டிராவுடன் நிறைவு செய்து முதலிடம் பிடித்த இந்தியா, காலிறுதிக்கு முன்னேறியது. அதில் பாகிஸ்தானை வியாழக்கிழமை (செப். 10) சந்திக்கிறது.